என்னிடம் அறை வாங்க போகிறாய்? இயக்குனரை எச்சரித்த ஸ்ரீரெட்டி

கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி டோலிட் மற்றும் கோலிவுட் திரையுலகினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் அடுக்கி கொண்டே உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீது இயக்குனர் வாராகி என்பவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். இந்த மனுவில் ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் வாராகிக்கு தனது முகநூலில் ஸ்ரீரெட்டி கடுமையான பதிவு
 

என்னிடம் அறை வாங்க போகிறாய்? இயக்குனரை எச்சரித்த ஸ்ரீரெட்டி

கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி டோலிட் மற்றும் கோலிவுட் திரையுலகினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் அடுக்கி கொண்டே உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீது இயக்குனர் வாராகி என்பவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். இந்த மனுவில் ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் வாராகிக்கு தனது முகநூலில் ஸ்ரீரெட்டி கடுமையான பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நான் பாலியல் தொழிலாளி இல்லை. என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு உணவு கூட தராமல் வெளியே அனுப்பினார்கள். யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள். பாதிக்கப்பட்ட பெண் நான். எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

என்னிடம் அறை வாங்க போகிறாய்? இயக்குனரை எச்சரித்த ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டியின் இந்த முகநூல் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி நெட்டிசன்களிடையே கிடைத்து வருகிறது.

From around the web