ஒருநாள் முதல்வர்: சோனு சூட் அளித்த அசத்தல் பதில்!

பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் இந்த கொரோனா காலத்தில் மக்களின் மனதில் ஹீரோவாகவே ஆகிவிட்டார். பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அவர் தனது சொந்த பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்தார். அது மட்டுமின்றி ஏராளமான ஏழை, எளிய மக்களுக்கு நிதியுதவி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது சமீபத்தில் கூட காளை மாட்டை வாடகைக்கு எடுக்க கூட முடியாத ஒரு விவசாயி தனது இரண்டு மகள்களின் உதவியால் நிலத்தை உழுதது குறித்து அறிந்தவுடன் அந்த
 
ஒருநாள் முதல்வர்: சோனு சூட் அளித்த அசத்தல் பதில்!

பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் இந்த கொரோனா காலத்தில் மக்களின் மனதில் ஹீரோவாகவே ஆகிவிட்டார். பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அவர் தனது சொந்த பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்தார். அது மட்டுமின்றி ஏராளமான ஏழை, எளிய மக்களுக்கு நிதியுதவி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் கூட காளை மாட்டை வாடகைக்கு எடுக்க கூட முடியாத ஒரு விவசாயி தனது இரண்டு மகள்களின் உதவியால் நிலத்தை உழுதது குறித்து அறிந்தவுடன் அந்த விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சோனு சூட் அவர்களுக்கு ஒரு நாள் முதல்வர் அல்லது ஒரு நாள் பிரதமர் பதவி தேடி வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த சோனு சூட் ’கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை வாய்ப்பு வரும்போது ஏன் நான் மிஸ் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்

மேலும் சோனு சூட் பெயரை பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்துள்ளது குறித்த கேள்விக்கு ’இதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஏழை எளிய மக்களின் மனதில் நான் இருப்பதை அறிந்து உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் சோனு சூட் அவர்களின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது

From around the web