பாலியல் கொடுமைக்கு எதிராக ஆவேசமாக களமிறங்கிய ஆறு நடிகைகள்

மீடூ விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகை நிலைகுலைய செய்துள்ளது. இந்த் நிலையில் சின்மயி கொடுத்த தைரியத்தில் தற்போது மலையாள படவுலகில் உள்ள ஒருசிலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசத்தொடங்கிவிட்டனர். இதுகுறித்து கொச்சியில் சினிமா கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யாநம்பீசன், அர்ச்சனா பத்மினி ஆகியோர் கொச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘லையாள
 

பாலியல் கொடுமைக்கு எதிராக ஆவேசமாக களமிறங்கிய ஆறு நடிகைகள்

மீடூ விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகை நிலைகுலைய செய்துள்ளது.

இந்த் நிலையில் சின்மயி கொடுத்த தைரியத்தில் தற்போது மலையாள படவுலகில் உள்ள ஒருசிலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசத்தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து கொச்சியில் சினிமா கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யாநம்பீசன், அர்ச்சனா பத்மினி ஆகியோர் கொச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘லையாள பட உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டினார்கள்.

இந்த பேட்டியின்போது நடிகை பார்வதி கூறியபோது, ‘புள்ளிக்காரன் ஸ்டாரா என்ற படத்தில் நான் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகியான ஷெரின் ஸ்டான்லி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.

From around the web