செல்வராகவனுக்கு என்ன ஆச்சு? பரவும் வதந்தியால் பரபரப்பு

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே. என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 60%க்கும் மேல் முடிந்துவிட்ட நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார் இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் அறுவை சிகிச்சை ஒன்று செய்து கொண்டதாகவும், இதனால் ‘என்.ஜி.கே’ படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆவது மட்டுமின்றி வரும் தீபாவளி தினத்தில்
 

செல்வராகவனுக்கு என்ன ஆச்சு? பரவும் வதந்தியால் பரபரப்பு

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே. என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 60%க்கும் மேல் முடிந்துவிட்ட நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் அறுவை சிகிச்சை ஒன்று செய்து கொண்டதாகவும், இதனால் ‘என்.ஜி.கே’ படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆவது மட்டுமின்றி வரும் தீபாவளி தினத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் வதந்தி என்றும், தனக்கு லேசான உடல்நலக்குறைவு மட்டுமே இருந்ததாகவும் விரைவில் ‘என்.ஜி.கே’ படத்தின் படப்பிடிப்பு தொடரும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் ‘என்.ஜி.கே; ரிலீஸ் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web