தல அஜித்தின் அடுத்த பட ஹீரோயின் சாயிஷாவா?

தல அஜித்தின் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ ஹெச்.வினோத், இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஹெச்.வினோத், சாயிஷாவிடம் கால்ஷீட் கேட்டதாக கோலிவுட்டில் செய்தி ஒன்று பரவி வருகிறது. எனவே அவர் அஜித்துக்கு ஜோடியாக சாயிஷாவை நடிக்க வைக்கத்தான் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. ‘வனமகன்’ படத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சாயிஷா ராசியான நடிகை என கோலிவுட்டில் பெயர் பெற்றுவிட்டதால் அவர் அஜித்
 
ajith-sayesha

தல அஜித்தின் அடுத்த பட ஹீரோயின் சாயிஷாவா?

தல அஜித்தின் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’ ஹெச்.வினோத், இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஹெச்.வினோத், சாயிஷாவிடம் கால்ஷீட் கேட்டதாக கோலிவுட்டில் செய்தி ஒன்று பரவி வருகிறது. எனவே அவர் அஜித்துக்கு ஜோடியாக சாயிஷாவை நடிக்க வைக்கத்தான் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

தல அஜித்தின் அடுத்த பட ஹீரோயின் சாயிஷாவா?

‘வனமகன்’ படத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சாயிஷா ராசியான நடிகை என கோலிவுட்டில் பெயர் பெற்றுவிட்டதால் அவர் அஜித் படம் மட்டுமின்றி விஜய் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் சாயிஷா நடிப்பில் உருவான ‘கஜினிகாந்த்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால் சாயிஷாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web