கருணாநிதிக்கு நடிகர் விஜய் மனைவி சங்கீதா அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இன்று காலையில் இருந்து ஏராளமான திரையுலகினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், ராதாரவி, மயில்சாமி என பலர் அஞ்சலி செலுத்தி விட்டனர். ஆனால் ஒருசிலர் வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் இருப்பதால் அவர்களால் நேரில் வரமுடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் நடிகர்
 
sangeetha

கருணாநிதிக்கு நடிகர் விஜய் மனைவி சங்கீதா அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இன்று காலையில் இருந்து ஏராளமான திரையுலகினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், ராதாரவி, மயில்சாமி என பலர் அஞ்சலி செலுத்தி விட்டனர்.

ஆனால் ஒருசிலர் வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் இருப்பதால் அவர்களால் நேரில் வரமுடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் நடிகர் விஜய்யால் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை.

கருணாநிதிக்கு நடிகர் விஜய் மனைவி சங்கீதா அஞ்சலிஇதனையடுத்து விஜய் சார்பில் அவருடைய மனைவி சங்கீதா சற்றுமுன்னர் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இன்னும் ஒருசில நாட்களில் விஜய் சென்னை திரும்பியவுடன் அவர் கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web