ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தது ஏன்?

நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் ரஜினி குறித்த செய்தியைத்தான் வெளியிட்டது. அவர் தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் அவரிடம் ஆத்திரமூட்டும் வகையில் கேள்விகளை கேட்டதாகவும் அப்போது ரஜினிகாந்த் உணர்ச்சிவசப்பட்டு ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையை உபயோகப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் வற்புறுத்தி வந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது டுவிட்டரில்
 

ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தது ஏன்?

நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் ரஜினி குறித்த செய்தியைத்தான் வெளியிட்டது. அவர் தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் அவரிடம் ஆத்திரமூட்டும் வகையில் கேள்விகளை கேட்டதாகவும் அப்போது ரஜினிகாந்த் உணர்ச்சிவசப்பட்டு ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையை உபயோகப்படுத்தியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் வற்புறுத்தி வந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது டுவிட்டரில் வருத்தம் தெரிவித்தார். ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியதாவது:

விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.

From around the web