நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தலாமே- விஜய் சேதுபதிக்கு ரஜினி வேண்டுகோள்

நடிகர் விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நடிகர் என்று சொல்வதை விட குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்து விட்ட நடிகர் என்றே கூறலாம்.

கடந்த சில வருடங்களில் எண்ணற்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்து நல்ல பெயரை பெற்றுள்ளார்.
வயதான கெட் அப்பில் கூட மிக இயல்பாக நடித்து அனைவர் மனதையும் கவர்ந்து கொண்டு வருகிறார். இதற்கு அவரின் சீதக்காதி, ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களே சான்று.
இவரது நடிப்பு திறனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெயிட்டான ரோலிலேயே நடித்து கலக்கும் அளவுக்கு புகழ்பெற்றார். அவரின் பேட்ட படத்தில் விஜய் சேதுபதியும், ரஜினியும் நடித்தது மாஸாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விஜய் சேதுபதியிடம் இப்போதைக்கு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வாய்ப்புகள் இருக்கும்போது பயன்படுத்தி கொள்ளுங்கள். படத்தயாரிப்பை பிறகு பார்த்து கொள்ளலாம் என ரஜினிகாந்த் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.