ஆணாதிக்கம் மிகுந்த திரையுலகம்: 42 வருட சாதனையாளர் ராதிகா வேதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதை திரை உலகமே கொண்டாடியது. அதேபோல் கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 61 ஆண்டுகள் ஆனதை அடுத்து திரையுலகின் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இரு பெரும் நடிகர்களுக்கு காமன் டிபி போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அதே நேரத்தில் நடிகை ராதிகா திரையுலகில் 42 ஆண்டுகள் பயணம் செய்தது குறித்து பெரிதாக எந்த திரையுலக பிரமுகர்களும் கண்டு கொள்ளவில்லை என்பதும் காமன்
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதை திரை உலகமே கொண்டாடியது. அதேபோல் கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 61 ஆண்டுகள் ஆனதை அடுத்து திரையுலகின் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இரு பெரும் நடிகர்களுக்கு காமன் டிபி போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் நடிகை ராதிகா திரையுலகில் 42 ஆண்டுகள் பயணம் செய்தது குறித்து பெரிதாக எந்த திரையுலக பிரமுகர்களும் கண்டு கொள்ளவில்லை என்பதும் காமன் டிபி போஸ்டர் போன்றவை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை ராதிகா ’ஆணாதிக்கம் நிறைந்த இந்த திரையுலகில் ஒரு பெண்ணின் சாதனைகளில் கொண்டாட மனம் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஆனால் அதே நேரத்தில் பாரதிராஜா இதுகுறித்து தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்ததற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாகவே ராஜா ராதிகாவின் சாதனை குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

என் இனிய தமிழ் மகளே,
கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி
கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்..
42 வருடமாகிறது
என் பாஞ்சாலியின்
பயணம் இன்னும்
நிற்கவில்லை..
பால்வெளித் திரளுக்கு எல்லை இல்லை..

From around the web