தனுஷ் ரசிகர்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுத்த பிரபல தயாரிப்பாளர்

தனுஷ் நடித்து வரும் ’கர்ணன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த சில தனுஷ் ரசிகர்கள் படப்பிடிப்பை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ் அப் உள்ளிட்டவைகளிலும் பரப்பி வருகின்றனர் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு அன்புடன் கூடிய ஒரு வேண்டுகோளை
 
தனுஷ் ரசிகர்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுத்த பிரபல தயாரிப்பாளர்

தனுஷ் நடித்து வரும் ’கர்ணன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த சில தனுஷ் ரசிகர்கள் படப்பிடிப்பை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ் அப் உள்ளிட்டவைகளிலும் பரப்பி வருகின்றனர்

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு அன்புடன் கூடிய ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கர்ணன் படப்பிடிப்புதள புகைப்படங்களை நீக்குமாறு தம்பி தனுஷ் ரசிகர்களுக்கும் சினிமா விரும்பிகளுக்கும் வேண்டுகோள்விடுக்கிறேன்.

From around the web