ப்ரியாவாரியரின் முதல் தமிழ் படம் எது தெரியுமா?

ஒரு ஆடார் லவ் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகும் நடிகை ப்ரியாவாரியர் சமீபத்தில் தனது ஒரே ஒரு கண்ணசைவு மற்றும் புருவ நடனம் மூலம் இண்டர்நெட்டில் வைரலானார். கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ப்ரியாவாரியருக்கு தென்னிந்திய இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்பு குவிந்தது. இந்த நிலையில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் நலன்குமாரசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ப்ரியாவாரியர் நடிக்கவுள்ளார். த்ரில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகவுள்ள இந்த
 

ஒரு ஆடார் லவ் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகும் நடிகை ப்ரியாவாரியர் சமீபத்தில் தனது ஒரே ஒரு கண்ணசைவு மற்றும் புருவ நடனம் மூலம் இண்டர்நெட்டில் வைரலானார். கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ப்ரியாவாரியருக்கு தென்னிந்திய இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்பு குவிந்தது.

இந்த நிலையில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் நலன்குமாரசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ப்ரியாவாரியர் நடிக்கவுள்ளார். த்ரில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் ப்ரியாவாரியர் கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே சூர்யா நடிக்கவுள்ள கே.வி.ஆனந்த் படத்தில் ப்ரியாவாரியர் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலை கே.வி.ஆனந்த் மறுத்துவிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியிலும் ரன்வீர் சிங் ஜோடியாக பிரியாவாரியர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது

From around the web