பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

ஆரம்ப காலங்களில் இருந்தே கொக்கி, லாடம்,லீ உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கியவர் பிரபு சாலமன் . இந்த படங்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இருப்பினும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல 2010ல் வெளியான மைனா படம் மூலம் முன்னணி இயக்குனர் அந்தஸ்தை அடைந்தார். இருப்பினும் அதற்கு பிறகு இவர் இயக்கிய சில படங்கள் பெரிதாக போகவில்லை. இந்நிலையில் விஷ்ணு விஷாலை வைத்து புதிய படமொன்றை சில மாதங்களாக இயக்கி வருகிறார்
 

ஆரம்ப காலங்களில் இருந்தே கொக்கி, லாடம்,லீ உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கியவர் பிரபு சாலமன் . இந்த படங்கள் எல்லாம் நன்றாக இருந்தாலும் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இருப்பினும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல 2010ல் வெளியான மைனா படம் மூலம் முன்னணி இயக்குனர் அந்தஸ்தை அடைந்தார். இருப்பினும் அதற்கு பிறகு இவர் இயக்கிய சில படங்கள் பெரிதாக போகவில்லை.

பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

இந்நிலையில் விஷ்ணு விஷாலை வைத்து புதிய படமொன்றை சில மாதங்களாக இயக்கி வருகிறார் பிரபு சாலமன்.

இவர்`ஹாதி மெரே சாதி’ என்ற இந்தி படத்தை  தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இயக்கி வருகிறார்.

இப்படத்தில்  விஷ்ணு விஷால் – ராணா டகுபதி இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மூணாரில் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது விஷ்ணு விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓய்வு இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

மீண்டும் பிரபு சாலமன் படத்தில் இணைந்திருக்கிறேன். விட்ட இடத்தில் இருந்து படப்பிடிப்பை துவங்கியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழில் `காடன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கிவ் `ஆரண்யா’ என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.

From around the web