ரஜினிக்கு எதிரான கருத்தை கூறினாரா ரஞ்சித்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது போராட்டம் போராட்டம் என்று இருந்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று ஆவேசமாக கூறினார். ஆனால் இந்த கருத்து அவருடைய சொந்த கருத்து என்றும் இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது என்றும் ரஜினி நடித்த ‘காலா’ படத்தின் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், ‘போராட்டம் வேண்டாம் என்று கூறுவது ரஜினியின் சொந்த கருத்து. நானும் இப்போது போராட்டத்தில் தான் இருக்கின்றேன். போராட்டத்தின் மூலம் தான் நம்முடைய பிரச்சனைகள்
 

ரஜினிக்கு எதிரான கருத்தை கூறினாரா ரஞ்சித்?சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது போராட்டம் போராட்டம் என்று இருந்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று ஆவேசமாக கூறினார். ஆனால் இந்த கருத்து அவருடைய சொந்த கருத்து என்றும் இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது என்றும் ரஜினி நடித்த ‘காலா’ படத்தின் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், ‘போராட்டம் வேண்டாம் என்று கூறுவது ரஜினியின் சொந்த கருத்து. நானும் இப்போது போராட்டத்தில் தான் இருக்கின்றேன். போராட்டத்தின் மூலம் தான் நம்முடைய பிரச்சனைகள் தீரும் என்று கூறினார்.

ரஜினிக்கு எதிரான கருத்தை கூறினாரா ரஞ்சித்?மேலும் ரஜினிகாந்த் போராட்டமே வேண்டாம் என்று கூறவில்லை, நான் இன்று காலையில் அவரிடம் பேசியபோது போராட்டங்கள் நடக்கும்போது ஏற்படும் அசம்பாவிதங்களால் அதன் வலி அதிகம் ஏற்படுகிறது என்ற வருத்தத்தை அவர் என்னிடம் தெரிவித்தார்.

போராட்டமே கூடாது என்றால் நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெறமுடியும் என்று கூறினார்

From around the web