காதலரை பிரிவது பெரிய வருத்தம்தான்: ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் இந்த காதலுக்கு தந்தை கமல் மற்றும் தாய் சரிகா ஆகியோர் ஒப்புதல் அளித்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் மும்பை வந்த மைக்கேல் கார்சேல், காதலி ஸ்ருதிஹாசனை சந்தித்துவிட்டு பின்னர் மீண்டும் லண்டன் திரும்பும்போது, அவரது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு முறையும் மும்பையில் இருந்து கிளம்பும் போது கவலையாக இருக்கிறது” என்று
 

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் இந்த காதலுக்கு தந்தை கமல் மற்றும் தாய் சரிகா ஆகியோர் ஒப்புதல் அளித்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மும்பை வந்த மைக்கேல் கார்சேல், காதலி ஸ்ருதிஹாசனை சந்தித்துவிட்டு பின்னர் மீண்டும் லண்டன் திரும்பும்போது, அவரது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு முறையும் மும்பையில் இருந்து கிளம்பும் போது கவலையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சுருதிஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவருக்கு விமானநிலையத்தில் குட்பை சொல்லுவதற்கு கடினமாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

From around the web