சிவகார்த்திகேயனை சந்தித்தாரா எல்.முருகன்? பாஜகவில் இணைய இருப்பதாக வதந்தி

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனை சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் சந்தித்துப் பேசியதாகவும் பாஜகவில் சிவகார்த்திகேயனை இணைக்க அவர் முயற்சி செய்து வருவதாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மாற்றுக் கட்சியினரையும் திரையுலகினர்களையும் கட்சிக்குள் இழுக்க எல். முருகன் அவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார். அவருடைய முயற்சிகளுக்கு ஒரு பல ஒருவித பலன்களும் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்த கட்டமாக முன்னணி ஹீரோக்களை கட்சிக்குள் இழுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், முதல் கட்டமாக அவர் சிவகார்த்திகேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கட்சியில் இணைந்தால் அவருக்கு ஒரு பெரிய தொகை கொடுக்கப்படும் என்று பேரம் பேச பட்டதாக கூறப்படுகிறது 

ஆனால் இந்த தகவலை சிவகார்த்திகேயனை தரப்பினர் முற்றிலும் மறுத்துள்ளனர். சிவகார்த்திகேயன் பாஜக உள்பட எந்த கட்சியிலும் இணைய மாட்டார் என்றும் அது மட்டுமின்றி கட்சி சார்பு உடைய திரைப்பட நிறுவனங்களில் கூட அவர் படங்கள் நடிக்க மாட்டார் என்றும் கூறி உள்ளனர் 

எனவே பாஜகவில் சிவகார்த்திகேயன் சேர இருப்பதாகவும் அவரை பாஜக தலைவர் சந்தித்ததாகவும் வெளிவந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தியே என்பது தெரியவந்துள்ளது

From around the web