‘காலா’ ரிலீசை கன்னடர்கள் விரும்பவில்லை: முதல்வர் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் ‘காலா’ திரைப்படம் ரிலீஸ் ஆவதை கன்னடர்கள் விரும்பவில்லை என்பதால் மக்கள் விருப்பத்திற்கு மாறாக இந்த விஷயத்தில் அரசு எதுவும் செய்யாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்பம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இந்த படத்தை திரையிட மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு
 

‘காலா’ ரிலீசை கன்னடர்கள் விரும்பவில்லை: முதல்வர் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் ‘காலா’ திரைப்படம் ரிலீஸ் ஆவதை கன்னடர்கள் விரும்பவில்லை என்பதால் மக்கள் விருப்பத்திற்கு மாறாக இந்த விஷயத்தில் அரசு எதுவும் செய்யாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்பம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இந்த படத்தை திரையிட மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டாலும் ‘காலா’ படம் கர்நாடகாவில் வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

‘காலா’ ரிலீசை கன்னடர்கள் விரும்பவில்லை: முதல்வர் குமாரசாமிஇந்த நிலையில் ‘காலா’ படம் ரிலீசாக அரசு உதவுவமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அரசு எந்த முடிவு எடுக்கவில்லை. மக்கள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது. மேலும் ‘காலா’ படம் திரையிடுவதில் கன்னடர்களுக்கு விருப்பமில்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.

முதல்வரின் இந்த கருத்தால் கர்நாடக மாநிலத்தில் ‘காலா’ ரிலீஸ் என்பது சந்தேகமே என கூறப்படுகிறது.

From around the web