கதாநாயகி ஆனார் கல்பனாவின் மகள்

பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘சின்னவீடு’ படத்தில் அறிமுகமாகி கார்த்தியின் ‘தோழா’ வரை பல படங்களில் நடித்தவர் நடிகை ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மரணம் அடைந்தார் இந்த நிலையில் இவருடைய மகள் ஸ்ரீசங்க்யா தற்போது மலையாளத்தில் ஒரு படத்தின் நாயகியாகியுள்ளார். ‘குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும்’ என்ற டைட்டிலில் உருவாகி வரும் படத்தில் ஸ்ரீசங்க்யா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் இர்ஷாத், கலாபவன் ஷாசான், பஷனம் ஷாஜி, ஸ்ரீஜித் ரவி, பினு ஆகியோரும்
 

பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘சின்னவீடு’ படத்தில் அறிமுகமாகி கார்த்தியின் ‘தோழா’ வரை பல படங்களில் நடித்தவர் நடிகை ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்

இந்த நிலையில் இவருடைய மகள் ஸ்ரீசங்க்யா தற்போது மலையாளத்தில் ஒரு படத்தின் நாயகியாகியுள்ளார். ‘குஞ்சியம்மாளும் அஞ்சமக்காளும்’ என்ற டைட்டிலில் உருவாகி வரும் படத்தில் ஸ்ரீசங்க்யா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

இந்த படத்தில் இர்ஷாத், கலாபவன் ஷாசான், பஷனம் ஷாஜி, ஸ்ரீஜித் ரவி, பினு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகிறது. சுமேஷ் லால் இயக்குகிறார். கலாரஞ்சனி, கல்பனா, ஊர்வசி ஆகிய மூவரைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் இருந்து ஸ்ரீசங்க்யாவும் சினிமாவுக்கு வந்துள்ளார்.

From around the web