உதயநிதி போட்டியிடும் தொகுதி இதுதானா? பரபரப்பு தகவல் 

 

முன்னாள் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் பேரனும் தற்போதைய திமுக தலைவருமான முக ஸ்டாலின் மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள ஒரு முக்கிய தொகுதியில் போட்டியிடப் போவதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சென்னையில் உள்ள சேப்பாக்கம் தொகுதியில் ஜெ அன்பழகன் அவர்கள் எம்எல்ஏவாக இருந்தார் என்பதும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் காரணமாக காலமானார் என்பது தெரிந்ததே. இந்தத் தொகுதியில்தான் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது 

udhayanidhi

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் போட்டியிட்ட இந்த தொகுதி தமிழகத்திலேயே மிகவும் சிறிய தொகுதி என்பதும் திமுக அதிக முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை போட்டியிட வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் இப்போது பூத் கமிட்டி உள்பட அனைத்தும் தயாராக இருப்பதாகவும் இந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை போட்டியிட வைத்து வெற்றி பெற்று தர வேண்டும் என்று திமுக இளைஞர் அணியினர் கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web