கடைசி அரசியல் தலைவர் கருணாநிதி: இளையராஜா இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இசைஞானி இளையராஜா கருணாநிதிக்கு தனது இரங்கலை வீடியோ ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியதாவ்து: தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் துக்க தினமாக இன்று ஆகிவிட்டது. டாக்டர் கலைஞர் ஐயா மறைந்தது நமக்கு எல்லாம் துக்க தினம் தான். இந்த துக்கத்தில் இருந்து எப்படி நாம் திரும்பி வரப்போகிறோம் என்று தெரியவில்லை. அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல்
 

கடைசி அரசியல் தலைவர் கருணாநிதி: இளையராஜா இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இசைஞானி இளையராஜா கருணாநிதிக்கு தனது இரங்கலை வீடியோ ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த வீடியோவில் கூறியதாவ்து: தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் துக்க தினமாக இன்று ஆகிவிட்டது. டாக்டர் கலைஞர் ஐயா மறைந்தது நமக்கு எல்லாம் துக்க தினம் தான். இந்த துக்கத்தில் இருந்து எப்படி நாம் திரும்பி வரப்போகிறோம் என்று தெரியவில்லை.

அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல் தலைவர் ஐயா. சினிமா துறையிலே தூய தமிழ் வசனங்களை அளித்த கடைசி வசனகர்த்தா ஐயா. அரசியல், சினிமா, தமிழ், கலை, இலக்கியம் என்று எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய ஐயாவின் இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இந்த நேரத்தில் நான் இங்கு ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக எனது குழுவினருடன் வந்து இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதால் தவிர்க்க முடியவில்லை. ஐயாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு இசைஞானி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

From around the web