ஹாரர் படங்களை பார்க்கவும் மாட்டேன், நடிக்கவும் மாட்டேன்: அரவிந்தசாமி

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் வரும் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடந்தது. இதில் இந்த படத்தின் ஹீரோ அரவிந்தசாமி பேசியதாவது: ‘இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சில மாற்றங்கள் செய்து தமிழில் படம் உருவாகி இருக்கிறது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தேன்.
 

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் இயக்கியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் வரும் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடந்தது. இதில் இந்த படத்தின் ஹீரோ அரவிந்தசாமி பேசியதாவது:

‘இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சில மாற்றங்கள் செய்து தமிழில் படம் உருவாகி இருக்கிறது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து அந்த கதாபாத்திரம் போல் 15 படங்கள் வந்தது. ஆனால், நான் நடிக்க வில்லை.

ஹீரோ, வில்லன் என்று இல்லாமல், நல்ல கதாபாத்திரம் அமைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான். அதில் நடிக்க மாட்டேன். பார்க்கவும் மாட்டேன். பேய் இருக்கா, இல்லையா என்ற கேள்விக்கு முதலில் மனிதர்கள் இருக்கிறார்களா? முதலில் நல்ல மனிதரை தேடுவோம். அதன் பின் பேய்யை இருக்கா இல்லையா என்று தேடுவோம். அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது’

இவ்வாறு அரவிந்தசாமி கூறினார்

From around the web