ஸ்ரீதேவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்த சுந்தர்பிச்சை

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு உள்ளூர் பிரமுகர்கள் முதல் உலக பிரபலங்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் கடந்த புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டபோது லட்சக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் இந்த நிலையில் தமிழரும், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவுமான சுந்தர்பிச்சை தனது டுவிட்டரில் ஸ்ரீதேவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ஸ்ரீதேவி நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சத்மா. இந்தப் படத்தை எனது குடும்பத்தினருடன் பார்த்த நினைவு இன்றும் உள்ளது.
 

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு உள்ளூர் பிரமுகர்கள் முதல் உலக பிரபலங்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் கடந்த புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டபோது லட்சக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

இந்த நிலையில் தமிழரும், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவுமான சுந்தர்பிச்சை தனது டுவிட்டரில் ஸ்ரீதேவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ஸ்ரீதேவி நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சத்மா. இந்தப் படத்தை எனது குடும்பத்தினருடன் பார்த்த நினைவு இன்றும் உள்ளது. அவர் நமக்கெல்லாம் முன்னோடி. பலரது வாழ்க்கையிலும் உந்துதலாக இருந்துள்ளார். உங்களது சோக இழப்பால் நாங்கள் வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதேவியின் ரசிகர் என்ற முறையில் சுந்தர்பிச்சை இரங்கல் தெரிவித்துள்ள போதிலும், அவர் தனது டுவீட்டில் தமிழ்ப்படமான ‘மூன்றாம் பிறை’ படத்தை சத்மா படத்திற்கு பதிலாக குறிப்பிட்டிருக்கலாம் என்று ஒருசிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

From around the web