விஜய் செடி நட்டத்தில் குற்றம் கண்டுபிடித்த அதிகபிரசங்கிகள்: நெட்டிசன்கள் விளாசல்

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்ச்சை நேற்று தளபதி விஜய் ஏற்று, தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை நட்டார் என்பதை பார்த்தோம். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே
ஆனால் இன்று ஒருசிலர் விஜய்யின் இந்த செயலில் குற்றம் கண்டு பிடித்துள்ளனர். விஜய் தனது டுவிட்டரில் இது குறித்த புகைப்படங்களை பதிவு செய்து அவர் வேறு யாருக்காவது இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை விடுத்திருக்கலாம் என்றும் அது மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இதேபோல் கிளீன் இந்தியா சேலஞ்சை ஏற்றுகொள்ளும்படி சொல்லி, செடிகள் நட சொல்லி இருக்கலாம் என்றும் அதிகப் பிரசங்கித் தனமாக அறிவுரைகளை கூறி வருகின்றனர்
விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் ஒரு செயலை செய்தால் போதும் அதைப் பார்த்த உடனே அவரது ரசிகர்கள் செய்து விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை நிரூபிப்பது போல் பல ரசிகர்கள் விஜய் செடியை நட்ட செய்தி வெளிவந்த சில மனி நேரங்களில் செடிகளை நட்டனர் என்பதும், அதுகுறித்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்து வந்ததே இதற்கு சாட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் க்ரீன் இந்தியா சேலஞ்சை அவர் யாருக்கும் விடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் செய்தாலே அதை உடனே மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என்பதும் அறிந்ததே. அவர் சேலஞ்ச் விடுத்து தான் மற்றவர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுகிறது
எனவே விஜய்க்கு அறிவுரை கூறும் அதிகபிரசங்கிகள் இவ்வாறான செய்லை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்