ஜூங்கா: திரைவிமர்சனம்

ஏற்கனவே ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் மூலம் வெற்றி பெற்ற கூட்டணியான விஜய்சேதுபதி-கோகுல் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘ஜூங்கா’ படம் எப்படி என்பதை பார்ப்போம் விஜய்சேதுபதியை என்கவுண்டரில் போட்டுத்தள்ள போலீஸ் அழைத்து செல்லும் காட்சியில் இருந்து படம் ஆரம்பிக்கின்றது. என்கவுடண்டர் செய்ய அழைத்து செல்லும் போலீசிடம் விஜய்சேதுபதி தனது கதையை பிளாஷ்பேக்காக சொல்வதுதான் படத்தின் கதை. விஜய்சேதுபதியின் தாத்தாவும், அப்பாவும் டான் ஆக இருந்தாலும் அதன் மூலம் சம்பாதிக்காமல் சொத்துக்களை இழந்த டான் ஆக உள்ளனர். தனது
 
jungaa

ஜூங்கா: திரைவிமர்சனம்ஏற்கனவே ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் மூலம் வெற்றி பெற்ற கூட்டணியான விஜய்சேதுபதி-கோகுல் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘ஜூங்கா’ படம் எப்படி என்பதை பார்ப்போம்

விஜய்சேதுபதியை என்கவுண்டரில் போட்டுத்தள்ள போலீஸ் அழைத்து செல்லும் காட்சியில் இருந்து படம் ஆரம்பிக்கின்றது. என்கவுடண்டர் செய்ய அழைத்து செல்லும் போலீசிடம் விஜய்சேதுபதி தனது கதையை பிளாஷ்பேக்காக சொல்வதுதான் படத்தின் கதை. விஜய்சேதுபதியின் தாத்தாவும், அப்பாவும் டான் ஆக இருந்தாலும் அதன் மூலம் சம்பாதிக்காமல் சொத்துக்களை இழந்த டான் ஆக உள்ளனர். தனது அம்மா பெயரில் இருந்த தியேட்டர் ஒன்றை விஜய்சேதுபதியின் அப்பா, ஒரு செட்டியாரிடம் விற்றுவிட்டார். அந்த தியேட்டரை மீட்க வேண்டும் என்பதற்காக டான் ஆக மாறி பணம் சேர்க்கின்றார் விஜய்சேதுபதி. ஆனால் தியேட்டரை கொடுக்க மறுக்கின்றார் செட்டியார். இதனால் பாரீசில் இருக்கும் செட்டியாரின் மகளான சாயிஷாவை கடத்த திட்டமிட்டு பாரீஸ் செல்கிறார் விஜய்சேதுபதி. இதன் விளைவுகள் என்ன? என்பதை காமெடி கலந்து சொல்வதுதான் மீதிக்கதை

ஜூங்கா: திரைவிமர்சனம்விஜய்சேதுபதி ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் மெருகேறி வருகிறார். காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் என அனைத்தையும் சரியாக செய்திருக்கின்றார். குறிப்பாக யோகிபாபுவுடன் அவர் செய்யும் காமெடி அனைத்துமே சூப்பர். அதிலும் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத கஞ்ச டானாக விஜய்சேதுபதியின் கேரக்டர் அமைந்திருப்பது புதுமைதான்

அழகு பதுமையாக வரும் சாயிஷா நடனத்தில் சூப்பராக இருந்தாலும் நடிப்பில் சுமார்தான். அதேபோல் இன்னொரு நாயகியான மடோனாவை இந்த படத்தில் வேஸ்ட் ஆக்கியுள்ளனர்

யோகிபாபு தான் படத்தின் மிகப்பெரிய பலம். சாப்பாடு கூட கிடைக்காமல், ஒரு கஞ்ச டானிடம் அசிஸ்டெண்ட் டானாக மாட்டிக்கொண்டு அவர் புலம்பும் ஒவ்வொரு புலம்பலும் காமெடிதான். பாரீஸ் போலீசிடம் சிக்கிக்கொண்டு தமிழில் அவர்களையே கலாய்ப்பது காமெடியின் உச்சம்

சரண்யா பொன்வண்ணன், சுரேஷ்மேனன், ராதாரவி,ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர். சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒகே ரகம். அதை படமாக்கிய விதமும் சூப்பர். டட்லியின் கேமிரா பாரிஸ் அழகை அழகாக திரையில் கொண்டு வந்துள்ளது.

என்னதான் காமெடி படமாக இருந்தாலும் இயக்குனர் கோகுல் கொஞ்சமாவது லாஜிக்கை பயன்படுத்தியிருக்கலாம். 20 மாடி கட்டிடத்தில் இருந்து ஒருவரை தூக்கி கீழே போட்டு கொலை செய்யும் ஜூங்கா கூட்டத்தினரை போலீஸ் தேடவே மாட்டார்களா? பாரிஸ் போலீஸ் தலைமை அலுவலகத்திலேயே ஒருவ்ர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முடியுமா என்ன? இதுபோன்று ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். இருப்பினும் படத்தில் இடைவிடாமல் இருக்கும் காமெடி காட்சிகளால் இந்த தவறுகள் பெரிதாக தெரியவில்லை. எல்லோரும் பாடல் காட்சிக்காகத்தான் லொகேஷன் பார்ப்பார்கள். ஆனால் இந்த படத்தில் லொகேஷன் அழகாக இருக்கின்றது என்பதற்காக பாடல் காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழுக்க முழுக்க ஒரு காமெடி படம் பார்த்த திருப்தி தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது இருந்தது என்பது மட்டும் உண்மை

3.5/5

From around the web