மணிரத்னம் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ்

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோலிவுட் திரையுலகில் அதிக திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் அடுத்ததாக மணிரத்னம் நிறுவனத்தின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் தனசேகரன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ’96’ மற்றும் ‘சீதக்காதி’ படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு மணிரத்னம் வசனம் எழுதவுள்ளதாகவும் இந்த படம் ஒரு குறுகிய
 


மணிரத்னம் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ்

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோலிவுட் திரையுலகில் அதிக திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் அடுத்ததாக மணிரத்னம் நிறுவனத்தின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் தனசேகரன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ’96’ மற்றும் ‘சீதக்காதி’ படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு மணிரத்னம் வசனம் எழுதவுள்ளதாகவும் இந்த படம் ஒரு குறுகிய கால படம் என்பதால் இவ்வருட கோடை விடுமுறையில் இந்த படம் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.


From around the web