எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் – விஜய் சொன்ன அரசியல் உதாரணம்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படமான பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இந்த விழாவில் விஜய், “ஒரு முறை எம்.ஜி.ஆர் காரில் சென்று கொண்டிருந்த போது அவருடன் இருந்த அமைச்சர் ஒருவர் கலைஞர் கருணாநிதி பற்றி தவறாக பேச, உடனே எம்.ஜி.ஆர் அந்த அமைச்சரை காரில் இருந்து இறக்கிவிட்டாராம். எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும்” என எம்.ஜி.ஆர் – கருணாநிதி
 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படமான பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் – விஜய் சொன்ன அரசியல் உதாரணம்!

இந்த விழாவில் விஜய், “ஒரு முறை எம்.ஜி.ஆர் காரில் சென்று கொண்டிருந்த போது அவருடன் இருந்த அமைச்சர் ஒருவர் கலைஞர் கருணாநிதி பற்றி தவறாக பேச, உடனே எம்.ஜி.ஆர் அந்த அமைச்சரை காரில் இருந்து இறக்கிவிட்டாராம். எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும்” என எம்.ஜி.ஆர் – கருணாநிதி நிகழ்வை உதாரணம் காட்டி பேசினார். இதைக் கேட்ட அவரது ரசிகர்கள் கைத்தட்டி வரவேற்றனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில், பிகில் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பாடப்பட்டது.

பிகில் திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

From around the web