பிரபல தமிழ் ஹீரோவின் அடுத்த படத்தில் அக்ஷய்குமார்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து அசத்தினார் அக்சய்குமார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழ் நடிகர் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அக்சய்குமார் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஒருவராகிய தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கிவரும் ’கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவருக்கு மூன்று படங்கள் ஏற்கனவே கமிட் ஆகியுள்ள நிலையில் தற்போது பிரபல பாலிவுட்
 
பிரபல தமிழ் ஹீரோவின் அடுத்த படத்தில் அக்ஷய்குமார்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து அசத்தினார் அக்சய்குமார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழ் நடிகர் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அக்சய்குமார் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஒருவராகிய தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கிவரும் ’கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவருக்கு மூன்று படங்கள் ஏற்கனவே கமிட் ஆகியுள்ள நிலையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

இந்த படத்தில்தான் முக்கிய வேடத்தில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாரா அலிகான் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web