பாஜகவில் சேருகிறாரா அஜித்?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சர்வசாதாரணமாகி வரும் நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்பட பலர் முதல்வர் கனவை நோக்கி காய் நகர்த்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் திரையுலக பிரமுகர்களை அரசியலுக்கு இழுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த அஜித்தையும் தற்போது அரசியலுக்கு இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. குறிப்பாக அஜித், பாஜக தமிழக தலைமையை ஏற்கவுள்ளதாகவும், அவரது தலைமையில் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற
 
ajith

பாஜகவில் சேருகிறாரா அஜித்?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சர்வசாதாரணமாகி வரும் நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்பட பலர் முதல்வர் கனவை நோக்கி காய் நகர்த்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் திரையுலக பிரமுகர்களை அரசியலுக்கு இழுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த அஜித்தையும் தற்போது அரசியலுக்கு இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. குறிப்பாக அஜித், பாஜக தமிழக தலைமையை ஏற்கவுள்ளதாகவும், அவரது தலைமையில் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற முயற்சிகள் நடந்து வருவதாகவும் வதந்திகள் கூறுகின்றன.

பாஜகவில் சேருகிறாரா அஜித்?இந்த வதந்திகள் அனைத்தும் உண்மையிலேயே வதந்திகள் தான், அஜித்துக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

From around the web