எஸ்வி சேகர் மீது திடீரென பாய்ந்த வழக்கு: கைது செய்யப்படுவாரா?

பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் மீது தமிழக போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்படுவார் என்ற தகவல் கசிந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் காவி நிறத்தை குறித்து முதல்வர் கூறிய ஒரு கருத்து குறித்து எஸ்வி சேகர் விமர்சனம்
 

பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் மீது தமிழக போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்படுவார் என்ற தகவல் கசிந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் காவி நிறத்தை குறித்து முதல்வர் கூறிய ஒரு கருத்து குறித்து எஸ்வி சேகர் விமர்சனம் தெரிவித்திருந்தார்

காவி நிறம் என்றால் தீண்டத்தகாத நிறமா என்றும் தேசிய கொடியில் கூட காவி நிறம் உள்ளது என்றும் தேசிய கொடியில் இருந்து காவி நிறத்தை கிழித்து எடுத்து விடுவீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

எஸ்வி சேகரின் இந்த கருத்துக்கும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தேசிய கொடியை அவமதித்து விட்டார் என்றும் கோரிக்கைகள் எழுந்தன

இந்த நிலையில் தற்போது தேசிய கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்வி சேகர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படை அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web