மிகுந்த எதிர்பார்ப்பில் 2.0 -பல வருடமாகியும் மாறாத ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை எனதான் சொல்ல வேண்டும்.எம்.ஜி.ஆர் காலத்துக்கு பிறகு ஒரு நடிகருக்கு வெறித்தனமான ரசிகர்கள் பல வருடமாக இருக்கிறார்கள் என்றால் அது ரஜினியை தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட மனிதன், மாவீரன், தர்மதுரை, ராஜாதிராஜா என80களில் ஹிட் அடித்த படங்களை என்ன மனநிலையில் ரசிகர்கள் பார்த்தார்களோ அதே அளவு இன்று 50 வயதை நெருங்கிய நெருங்கி கொண்டிருக்கிற அந்த ரசிகர்கள் 2.0 வையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அரசியல் ரீதியாக ரஜினி ஆயிரம் கண்ணாமூச்சி
 

ரஜினி ரசிகர்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை எனதான் சொல்ல வேண்டும்.எம்.ஜி.ஆர் காலத்துக்கு பிறகு ஒரு நடிகருக்கு  வெறித்தனமான ரசிகர்கள் பல வருடமாக இருக்கிறார்கள் என்றால் அது ரஜினியை தான் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட மனிதன், மாவீரன், தர்மதுரை, ராஜாதிராஜா என80களில் ஹிட் அடித்த படங்களை என்ன மனநிலையில் ரசிகர்கள் பார்த்தார்களோ அதே அளவு இன்று 50 வயதை நெருங்கிய நெருங்கி கொண்டிருக்கிற அந்த ரசிகர்கள் 2.0 வையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்பில் 2.0 -பல வருடமாகியும் மாறாத ரஜினி ரசிகர்கள்

அரசியல் ரீதியாக ரஜினி ஆயிரம் கண்ணாமூச்சி காட்டினாலும் அந்தக்காலத்தில் இருந்த ரஜினி ரசிகர்கள் அப்படியே எந்த கட்சியும் மாறாமல் தங்கள் தலைவன் கட்சி ஆரம்பிப்பார். 2.0 வை எப்படியும் முதல் ஷோவிலேயே பார்த்துவிட வேண்டும் என அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான மனநிலையில் 30 வருடத்துக்கும் மேலாக இருந்து வருகிறார்கள்.

இன்றைய இளம் தலைமுறை நடிகர்களின் ரசிகர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற வகையில் 2.0 உட்பட ரஜினியின் படங்களை அதிகம் எதிர்பார்த்து கட் அவுட் பேனர் என வைத்து அசத்துகிறார்கள்.

2.0 வுக்கு மற்ற படங்களை விட இந்த படத்திற்கு ரஜினியின் ஸ்பெஷல் காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் டிக்கெட் டிமாண்ட் ஆக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web