இந்த ஆண்டு நீட்தேர்வு ரத்தா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல்வகை தேர்வுகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வான இருக்கும் நீட் தேர்வையும் இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது ஏற்கனவே ஜூலை 26ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள இந்த தேர்வை திட்டமிட்ட தேதியில் நடத்த முடியாது என்பதை
 

இந்த ஆண்டு நீட்தேர்வு ரத்தா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல்வகை தேர்வுகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வான இருக்கும் நீட் தேர்வையும் இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது

ஏற்கனவே ஜூலை 26ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள இந்த தேர்வை திட்டமிட்ட தேதியில் நடத்த முடியாது என்பதை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது ஜூலையில் நடத்த இருந்த நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இந்த தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடக்க நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் செப்டம்பரிலும் கொரானா வைரஸ் தாக்கம் தொடர்ந்தால் இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ஒருவேளை இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web