திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : அலுவலக உதவியாளர் : 03 காலிப்பணியிடம் ஊர்தி ஓட்டுநர் : 02 காலிப்பணியிடம் சம்பளம் : அலுவலக உதவியாளர் : ரூ. 15,700 முதல் 50,000/- வரை ஊர்தி ஓட்டுநர் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை கல்வித் தகுதி :
 
Trichy District AHD Jobs

திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் :

அலுவலக உதவியாளர் : 03 காலிப்பணியிடம்
ஊர்தி ஓட்டுநர் : 02 காலிப்பணியிடம்

சம்பளம் :

அலுவலக உதவியாளர் : ரூ. 15,700 முதல் 50,000/- வரை
ஊர்தி ஓட்டுநர் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை

கல்வித் தகுதி :

அலுவலக உதவியாளர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
ஊர்தி ஓட்டுநர் : 8-ம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

முக்கிய குறிப்பு : ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லது பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட மேற்பட்ட பொதுக் கல்வித் தகுதி அல்லது கல்லூரி பட்ட படிப்பு பெற்றிருந்தால் அதிகபட்சமாக 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2019/12/2019120671.pdf பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2019/12/2019120671.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத் துறை,
டாப்கோ கோழிப்பண்ணை வளாகம்,
புதுக்கோட்டை மெயின்ரோடு,
திருச்சிராப்பள்ளி – 23

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2019 மாலை 5.45 மணி வரை

From around the web