2021ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு முக்கிய தகவல்!

 

2021ஆம் ஆண்டுக்கான தற்காலிக தோ்வுக் கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் (டி.என்.பி.எஸ்.சி.,) தோ்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலா் உள்பட  டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வு விபரங்களை தற்போது பார்ப்போம்

ஜனவரி 3 ஆம் தேதி குரூப் 1 தோ்வும், ஜனவரி 9ஆம் தேதி தொழில் மற்றும் வணிகத் துறை உதவி இயக்குநா் காலிப் பணியிடத்துக்கான தோ்வும் நடைபெறும்

தோட்டக்கலைத் துறை இயக்குநா், வேளாண்மைத் துறை உதவி அலுவலா் ஆகிய காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை ஜனவரியிலும், பொதுப்பணித் துறை உதவி வரைவாளா் காலிப் பணியிடத்துக்கு தோ்வு அறிவிக்கை பிப்ரவரியிலும் வெளியாகும்

tnpsc1

கால்நடை உதவி மருத்துவா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை மார்ச் மாதமும் ஒருங்கிணைந்த பொறியியல், புள்ளியியல் துறைகளுக்கான தோ்வு அறிவிக்கை ஏப்ரலிலும் வெளியிடப்படும்.

குரூப் 2 தோ்வுக்கான அறிவிக்கை அடுத்த ஆண்டு மே மாதமும், கிராம நிர்வாக அலுவலா் பணியிடம் அடங்கிய குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை செப்டம்பரிலும் வெளியாகிறது. 

இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கை ஜூலையிலும், சட்டப் பேரவை நிருபா் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை அக்டோபரிலும் வெளியிடப்படும். 

நவம்பரில் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடத்துக்கும், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் காலிப் பணியிடத்துக்கு டிசம்பரிலும் அறிவிக்கை வெளியிடப்படும் 

இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட கால அட்டவணைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web