விருச்சிகம் ராசி விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018!

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் அமையும் வருடமாக இருக்கப் போகிறது. உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்தில் சனி பகவான், மூன்றாம் இடத்தில் கேது பகவான், ஒன்பதாம் இடத்தில் ராகு பகவான், பன்னிரண்டாம் இடத்தில் குரு பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் இந்த விளம்பி வருடத்தில் அடுத்தடுத்து குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்த வருடத்தில் விருச்சிகம் ராசியினர் யாருக்கும் எவ்வித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம்.
 
Viruchigam vilambi Tamil puthandu rasi palan

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் அமையும் வருடமாக இருக்கப் போகிறது. உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்தில் சனி பகவான், மூன்றாம் இடத்தில் கேது பகவான், ஒன்பதாம் இடத்தில் ராகு பகவான், பன்னிரண்டாம் இடத்தில் குரு பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் இந்த விளம்பி வருடத்தில் அடுத்தடுத்து குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த வருடத்தில் விருச்சிகம் ராசியினர் யாருக்கும் எவ்வித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். தீர யோசித்த பிறகே முடிவெடுங்கள். திட்டமிட்டு செயல்புரிந்தால் பாராட்டுகள் தேடிவரும். யாரிடமும் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர வேண்டாம். மூன்றாம் நபர் தலையீடு வீட்டில் பிரிவினையை உண்டாக்கும். வீட்டில் விட்டு கொடுத்துச் செல்லுங்கள். உங்கள் மேல் அக்கறை உள்ளவர்களின் அறிவுரைக் கேட்டு நடந்துக் கொள்ளுங்கள்.

அலுவலகத்தில் உங்கள் முயற்சிக்கு ஏற்றார் போல் நல்ல பலன் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களை புறம் பேசினாலும் அதனை பெரிதுப்படுத்தாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். துணிச்சல் பெருகும் என்பதால் பிறரிடம் பேசும் பொழுது பணிவாக பேசுங்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.

புதிய முயற்சிகள், யுத்திகள் பயன்படுத்தி வியாபாரம், தொழில் போன்றவற்றில் லாபம் பெறுவீர்கள். உங்க திறமை வெளிப்படும் என்பதால் முடங்கி இருக்காமல் ஏதேனும் முயற்சி செய்து கொண்டே இருந்தால் நன்மைகள் ஏற்படும் வருடமாக இருக்கும். அனுபவமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும்.

விருச்சிகம் ராசி பெண்களுக்கு திடீர் யோகம் உண்டாகும். ராஜ யோகம் ஏற்படும் என்றே சொல்லலாம். இதுவரை திருமணத் தடை இருந்தவர்களுக்கு மனதிற்கு ஏற்றார் போல் நல்ல வரன் அமையும். ஆன்மீக சுற்றலா  சென்று வருவீர்கள்.பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குறிப்பாக குலதெய்வ வழிபாடு செய்தால் வீட்டில் சுப நிகழ்வுகள் தடையின்றி நடைபெறும். எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பு தீர யோசித்து பிறகு செயலில் ஈடுபடுங்கள். வாழ்க்கை துணையிடம் விட்டு கொடுத்துச் செல்லுங்கள்.

ஒரு சில நேரங்களில் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லையே என்று இருப்பீர்கள். இனி இல்லத்தில் சுணக்கம் நீங்கி இணக்கம் உண்டாகும். மின்சாதனங்கள், தீயினால் பாதிப்பு உண்டாகும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிக ராசி மாணவ மாணவிகளின் திறமைகள் பளிச்சிடும் வருடமாக இருக்கும். இந்த வருடத்தில் சோம்பலை விலக்கி, சிறிது முயற்சி செய்தாலும் வெற்றி கிட்டும். உயர்கல்வியில் தொடக்கத்தில் தாமதம் ஏற்பட்டாலும் பிறகு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிட்டும்.

பரிகாரம்:

உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து வாருங்கள். அமாவாசையன்று முன்னோர்களை நினைத்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஏற்படுகிற சுபதடைகள் விலகி மங்கள விசேஷங்கள் ஒன்றபின் ஒன்றாக நடைபெறும்.

From around the web