விருச்சிகம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் பொருளாதாரம் நிலை உயரும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் மகர ராசியில் உச்சமாக இருப்பதால் அதிக அளவில் நன்மைகள் நடைபெறப் போகின்றது. உற்றார் உறவினர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். போட்டியாக இருந்தவர்கள் தானாக விலகிச் செல்வார்கள். தொட்டது துலங்கும். உங்கள் ராசியின் வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் அவ்வப்போது கோபமான சூழல் உண்டாகும்.குடும்பத்தில்
 
Viruchigam june month rasi palan 2018

அன்புள்ள விருச்சிகம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் பொருளாதாரம் நிலை உயரும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் மகர ராசியில் உச்சமாக இருப்பதால் அதிக அளவில் நன்மைகள் நடைபெறப் போகின்றது. உற்றார் உறவினர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். போட்டியாக இருந்தவர்கள் தானாக விலகிச் செல்வார்கள். தொட்டது துலங்கும்.

உங்கள் ராசியின் வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் அவ்வப்போது கோபமான சூழல் உண்டாகும்.குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். குரு பகவான் வக்கிரத்தில் இருப்பதால் பிள்ளைகளுக்கு சுப காரியங்களை முன்னிட்டு செய்வீர்கள். கேது பகவான் சகாய ஸ்தானத்தில் இருப்பதால் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். அதன் வழியாக வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

ஜூன் 5-ஆம் தேதி புதன் மிதுனத்தில் சஞ்சரிக்கும்போது விலகி சென்ற சொந்த பந்தங்கள் விரும்பி வருவார்கள். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் ஊர்மாற்றம் உண்டாகும். வீட்டை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கல்யாண பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும்.

கடகத்தில் சுக்கிரன் ஜூன் 9- ம் தேதி சஞ்சரிக்கும்போது விபரீத ராஜயோகம் உண்டாகும். திடீர் திருப்பங்கள் வரக்கூடும். திட்டமிட்டு செயல்படும் காரியங்கள் நல்லபடியாக முடிவடையும். கணவன் மனைவி ஒற்றுமை புலப்படும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படும். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

From around the web