துலாம் ராசி விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018!

துலாம் ராசிக்காரர்கள் இந்த தமிழ் புத்தாண்டில் எதையும் அலட்சியம் செய்யாமல் நிதானமாக செயல்பட்டால் நன்மைகள் நடைபெறும் வருடமாக இருக்கும். உங்கள் ஜென்ம ராசியில் குரு பகவான், மூன்றாம் இடத்தில் சனி பகவான்,நான்காம் இடத்தில் கேது பகவான், பத்தாம் இடத்தில் ராகு பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் இந்த விளம்பி வருடத்தில் அடுத்தடுத்து குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு துலாம் ராசியினருக்கு செல்வாக்கு, மரியாதை கூடும் வருடமாக இருக்கப் போகிறது.
 
Thulam vilambi Tamil puthandu rasi palan

துலாம் ராசிக்காரர்கள் இந்த தமிழ் புத்தாண்டில் எதையும் அலட்சியம் செய்யாமல் நிதானமாக செயல்பட்டால் நன்மைகள் நடைபெறும் வருடமாக இருக்கும். உங்கள் ஜென்ம ராசியில் குரு பகவான், மூன்றாம் இடத்தில் சனி பகவான்,நான்காம் இடத்தில் கேது பகவான், பத்தாம் இடத்தில் ராகு பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் இந்த விளம்பி வருடத்தில் அடுத்தடுத்து குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த ஆண்டு துலாம் ராசியினருக்கு செல்வாக்கு, மரியாதை கூடும் வருடமாக இருக்கப் போகிறது. எதிலும் நிதானமாக செயல்படுங்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். பிறர் செய்த தவறுகள் மற்றும் செய்கிற காரியத்திற்கு நீங்கள் அவப்பெயர் வாங்கும் அமைப்பு இருப்பதால் யாருடைய பொது விஷயத்திலும் தலையிட வேண்டாம்.

அலுவலகத்தில் நேரத்தை கடைபிடியுங்கள். திட்டமிட்டு செயல் புரிந்தால் நேரம் தவறாமல் இருக்கும். பொதுவாக எந்த வேலை உங்களுக்கு கொடுத்தாலும் அதனை அலட்சியம் படுத்தாமல் விரைந்து முடித்து விடுங்கள். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்களின் திறமையை கண்டு பாராட்டுவார்கள். உங்கள் திறமை வெளிப்படும் நேரம் என்பதால் கடினமாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும். உழைப்பிற்கு ஏற்ற மாதிரி பதவி உயர்வு, சம்பள உயர்வு கிட்டும்.

சிலருக்கு புதிய தொழில்,வியாபாரம் செய்ய நேரம் வந்திருக்கிறது. ஏற்கனவே தொழில், வியாபாரம் செய்கின்றவர்களுக்கு தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு வங்கி  கடன் கிடைக்கும். தாமதமாக கிடைத்தாலும் தகுந்த நேரத்தில் அது உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி பெண்களுக்கு நல்ல வளர்ச்சியும், நன்மையையும் ஏற்படுகின்ற வருடமாக இருக்கப் போகிறது. துலாம் ராசி பெண்கள் இந்த வருடம் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் மேல் அக்கறை உள்ளவர்களின் ஆலோசனைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை பொய்யாக புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் கொடுக்காதீர்கள். ஒரு சிலர் ஏமாற வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வீடு, மனை, வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் இருக்கிறது. உங்கள் திறனுக்கு ஏற்றார் போல் எல்லாம் நல்ல விதமாக முடிவடையும். உயர்கல்வி, திருமணம் போன்றவற்றில் தடை இருப்பவர்களுக்கு தடைகள் விலகும்.

உடன்பிறந்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படும் என்பதால் முடிந்த அளவிற்கு தவிர்த்துவிடுங்கள். குடும்பத்தில் பொறுப்புகள் கூடும். பழையதை நினைத்து எதையும் பெரிதுப்படுத்தாமல் விட்டுக் கொடுத்து சென்றால் இல்லறத்தில் அமைதியான சூழல் உருவாகும். வாழ்க்கை துணையிடம் சிறுசிறு கருத்து  வேறுபாடுகள் தோன்றக்கூடும். வேண்டாத குழப்பங்கள், வீண் சிந்தனைகள் வரக்கூடும் என்பதால் மனதை ஒருநிலைப் படுத்துங்கள். தினமும் ஒரு பத்து  நிமிடம் வீட்டில் தியானம் செய்து வாருங்கள். மறைமுக எதிரிகள் தோன்றக்கூடும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

துலாம் ராசி மாணவ மாணவிகளின் கவனம் சிதறும் என்பதால் பெற்றோர் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். உங்கள் உழைப்புக்கு ஏற்றார் போல் முன்னேற்றம் வரும்.

பரிகாரம்:

மாதத்தில் ஒரு முறையாவது அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று தரிசித்து வாருங்கள். முருகனின் அருளால்  இந்த விளம்பி வருடம் முழுவதும் உங்கள் வாழ்க்கை  சிறப்பாக அமையும்.

From around the web