ரிஷபம் விளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018!

ரிஷபம் ராசியினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், பல வித தடைகள் தகரக்கூடிய காலமாக இருக்கும். உங்கள் ராசியிலிருந்து மூன்றாம் இடத்தில் ராகு பகவான்,ஆறாம் இடத்தில் குரு பகவான், எட்டாம் இடத்தில் சனி பகவான், ஒன்பதாம் இடத்தில் கேது என்ற கிரக அமைப்பு இருக்கிறது. இந்த வருட குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி மற்றும் பிற கிரகங்கள் இருக்கின்ற கிரக அமைப்பு போன்றவற்றால் உங்களுக்கு மாற்றங்கள் நிகழப் போகிறது. பணிபுரிபவர்கள் செய்கிற வேலையில் அலட்சியம் காட்ட
 
Rishabam vilambi Tamil puthandu rasi palan

ரிஷபம் ராசியினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், பல வித தடைகள் தகரக்கூடிய காலமாக இருக்கும். உங்கள் ராசியிலிருந்து மூன்றாம் இடத்தில் ராகு பகவான்,ஆறாம் இடத்தில் குரு பகவான், எட்டாம் இடத்தில் சனி பகவான், ஒன்பதாம் இடத்தில் கேது என்ற கிரக அமைப்பு இருக்கிறது. இந்த வருட குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி மற்றும் பிற கிரகங்கள் இருக்கின்ற கிரக அமைப்பு போன்றவற்றால் உங்களுக்கு மாற்றங்கள் நிகழப் போகிறது.

பணிபுரிபவர்கள் செய்கிற வேலையில் அலட்சியம் காட்ட வேண்டாம். எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தைத் தவிர்த்திடுங்கள்.தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்துவிடுங்கள். தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் பல வித பிரச்சனைகள் வராமல் இருக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம், எதிர்பார்த்த பணிமாற்றம் வரக்கூடும். பணிமாற்றத்தில் தாமதம் ஏற்பட்டாலும் தகுந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் வரக்கூடும். அனுபவமிக்கவரிடம் அலட்சியம் காட்ட வேண்டாம். மூன்றாம் நபர் சம்பந்தமான விஷயங்களில் தலையிட வேண்டாம்.

கூட்டு தொழில் செய்கிறவர்களுக்கு மாற்றங்கள் உண்டாகும். உங்களிடம் பணிபுரிபவர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். இந்த காலகட்டத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்த்திடுங்கள். பெரிய முதலீடுகள் கொண்டு தொழில் செய்ய நேரிட்டால் தகுந்தவர்களிடம் ஆலோசானை கேட்டு முதலீடு செய்தால் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். முழுமையாக திட்டமிட்டு செயல் புரிந்தால் அதிக அளவில் நன்மை கிடைக்கும். அனாவசியமாக யாருக்கும் வாக்கு உறுதி கொடுக்க வேண்டாம்.

குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். வீட்டில் மங்கள விசேஷங்கள் படிப்படியாக ஏற்படும். குடும்பப் பிரச்சனைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விளையாட்டான கேலி கூட விபரீதமான விளைவை ஏற்படுத்தும். வரவு ஓரளவிற்கு வந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். திருமணத் தடை விலகி மனதிற்கேற்ற வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு,வாகனம் புதிப்பிக்க நேரம் வந்து இருக்கிறது. வாழ்கை துணையின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

மாணவ மாணவிகள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்கு கடன் உதவி கிடைக்கும். வெளிநாட்டு படிப்பு அமையும். ஒரு சிலருக்கு மறதி ஏற்படக்கூடும் என்பதால் சின்னச் சின்ன குறிப்புகளாக எழுதி வைத்து படிப்பது தேர்வு நேரத்தில் நன்மை தரும் விதமாக இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை விநாயகரை வழிபட்டு வந்தால் தடைகள் எல்லாம் அகற்றுவார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை சென்று வழிபட்டு வரலாம்.

From around the web