சிம்மம் ஐப்பசி மாத இராசி பலன் 2020!
 

சிம்ம ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஏனெனில் அனைத்து விதமான பலன்களையும் பெறுவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் எதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களோ அவை அனைத்தும் நடக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு என அனைத்தும் கிடைக்க வாய்ப்புண்டு.

குடும்பத்தில் உள்ள மனக் குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவி இடையே அன்பும், மகிழ்ச்சியும் பெருகும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். இதனால் உடல் சம்பந்தப் பட்ட அனைத்து நோய்களும் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

புதிதாக வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புண்டு. நீண்ட நாட்களாக தீராமல் இருந்த நிலம் தொடர்பான பிரச்சினை நீங்கி அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

மேலும் உடலில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் இம்மாதத்தில் செய்வது மிகுந்த பலனை அளிக்கும். புதிய நண்பர்கள் நம்பிக்கையானவர்களாக இருப்பர்.

நமது மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இதனால் அவர்களை கடவுள் கொடுத்த வரம் என்று கருதி அவர்களை விட்டு நீங்காமல் இருக்க முயற்சி செய்வீர்கள். உங்களது பெயரில் புதிதாக சொத்து வாங்குவீர்கள். அம்மன் வழிபாடு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்.
 

From around the web