மிதுனம் ராசி விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018!

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு அதிக அளவில் நன்மைகள் தரப் போகிறது. இதுவரை நீங்கள் பட்ட துயரங்கள், கஷ்டங்கள் யாவும் படிப்படியாக விலக போகிறது. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான கடகத்தில் ராகு பகவான், ஐந்தாம் இடத்தில் குரு பகவான், ஏழாம் இடத்தில் சனி பகவான், எட்டாம் இடத்தில் கேது பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் இந்த வருடத்தில் நடக்கும் குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு பல வித மாற்றங்களைத் தரப்
 
Mithunam vilambi Tamil puthanu rasi palan

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு அதிக அளவில் நன்மைகள் தரப் போகிறது. இதுவரை நீங்கள் பட்ட துயரங்கள், கஷ்டங்கள் யாவும் படிப்படியாக விலக போகிறது. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான கடகத்தில் ராகு பகவான், ஐந்தாம் இடத்தில் குரு பகவான், ஏழாம் இடத்தில் சனி பகவான், எட்டாம் இடத்தில் கேது பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் இந்த வருடத்தில் நடக்கும் குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு பல வித மாற்றங்களைத் தரப் போகிறது.

எந்த காரியம் செய்தாலும் அதில் முழு கவனத்துடன் செயல் புரிந்தால் நன்மை உண்டாகும். யாருடைய வீண் பேச்சுகளுக்கும் செவி சாய்க்காமல் இருக்க வேண்டும். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நன்மைகள் தரக்கூடியதாக இருக்கும். இதுவரை வீட்டில் சண்டை சச்சரவு என்று இருந்து வந்த சூழல் மாறும். குடும்பத்தில் சுணக்கம் நீங்கி இணக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார். அவரின் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.

உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல் புரிந்தால் வேலைகளை சுலபமாக முடித்து விடலாம். அவ்வப்பொழுது உடல்நலனில் பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உடல் நலனில் அக்கறையாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் புறம் பேசி, இழிவாக கடிந்து பேசி உங்கள் மதிப்பினைக் குறைத்து கொள்ளாதீர்கள். தடைபட்டுக் கொண்டு இருந்த சுப விசேஷங்கள் யாவும் நல்லபடியாக நடைபெறும். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள். கடன்களை எப்படி அடைக்க போகிறோம் என்று இருந்தவர்கள் கூட விரைவில் அடைத்து விடுவீர்கள். கடன் அடைக்கும் அளவிற்கு வருவாய் சீராக இருக்கும்.

மிதுனம் ராசியினருக்கு வீடு,மனை,வாகனம் புதுப்பிக்க, மாற்ற நேரம் வந்து இருக்கிறது. செய்யும் காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அக்கம் பக்கம் புறம் பேசினாலும் அதனை பெரிது படுத்தாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். மிதுனம் ராசி பெண்களுக்கு நிம்மதியான சூழல் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டு இருந்த குழப்பான சூழ்நிலை மாறி சீராக இருக்கும். அவ்வப்பொழுது உடல்நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.விடாமுயற்சியுடன் செயல் பட்டால்,நல்ல முன்னேற்றம் ஏற்படும் காலமாக இருக்கும். பிறரிடம் உங்கள் குடும்பப் பிரச்சனைகளைப் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். குடும்பப் பிரச்சனைகளில் மூன்றாம் நபர் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள்.

மிதுனம் ராசியினர் எந்த வேலை, தொழில் செய்தாலும் அதில் ஏற்றமும், மாற்றமும் உண்டாகும். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் புதுப்பிக்கும் பொழுது கவனமாக படித்து பார்த்து கையெழுத்து போடுங்கள். இந்த விளம்பி வருட பிற்பகுதியில் மிதுனம் ராசியினருக்கு தடைபட்ட விஷயங்கள் யாவும் படிப்படியாக நடைபெறப் போகிறது. இதுவரை ஊதிய உயர்வு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் சம்பள உயர்வு, இடமாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு அயல் நாட்டில் பணிபுரியும் அமைப்பு உண்டாகும்.

உங்கள் படிப்பு  மற்றும்  திறமைக்கேற்ப நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.

மிதுனம் ராசி மாணவ மாணவிகளே, உங்கள் திறமைக்கேற்றபடி உரிய உயர்வு பெறுவீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்த கல்லூரி செல்லும் அமைப்பு இருக்கிறது. ஒரு சிலருக்கு வெளிநாட்டு கல்வி வாய்ப்பு கிட்டும். அதற்கு தேவையான கடன்  உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்:

செவ்வாய் கிழமை அருகில் இருக்கும் துர்க்கை அம்மனை வழிபட்டு வரலாம். நரசிம்மரை தரிசித்து வந்தால் உங்கள் வாழ்கை செழிக்கும்.

From around the web