மேஷம் ராசி விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள்!

இந்தப் புத்தாண்டு மேஷ லக்கினத்தில் பிறக்கிறது. நான்காம் இடத்தில் ராகு, ஏழாம் இடத்தில் குரு, ஒன்பதாம் இடத்தில் சனி, பத்தாம் இடத்தில் கேது என்ற கிரக அமைப்பு இருக்கிறது. இந்த விளம்பி வருடம் மேஷம் ராசியினருக்கு ஏற்றமும் மாற்றமும் தரக்கூடியதாக வருடமாக இருக்கப் போகிறது. இதுவரை பணியிடத்திலிருந்த மறைமுக தொல்லைகள் எல்லாம் அகலும். எதிரிகளின் சூழ்ச்சி அறிந்து உங்களின் திறன் வெளிப்படுத்தி பாராட்டு, பதவி உயர்வு பெறுவீர்கள். இந்த வருடம் நீங்கள் தன்னம்பிக்கை மற்றும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
 
Mesham vilambi Tamil puthandu rasi palan

இந்தப் புத்தாண்டு மேஷ லக்கினத்தில் பிறக்கிறது. நான்காம் இடத்தில் ராகு, ஏழாம் இடத்தில் குரு, ஒன்பதாம் இடத்தில் சனி, பத்தாம் இடத்தில் கேது என்ற கிரக அமைப்பு இருக்கிறது. இந்த விளம்பி வருடம் மேஷம் ராசியினருக்கு ஏற்றமும் மாற்றமும் தரக்கூடியதாக வருடமாக இருக்கப் போகிறது. இதுவரை பணியிடத்திலிருந்த மறைமுக தொல்லைகள் எல்லாம் அகலும். எதிரிகளின் சூழ்ச்சி அறிந்து உங்களின் திறன் வெளிப்படுத்தி பாராட்டு, பதவி உயர்வு பெறுவீர்கள்.

இந்த வருடம் நீங்கள் தன்னம்பிக்கை மற்றும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இதுவரை இருந்துவந்த இனம் புரியாத பயம், குழப்பம் நீங்கும். வேண்டாத நட்பு வட்டங்களை தவிர்த்திடுங்கள். அவர்களால் உங்களுக்கு வீண் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது. மேல் அதிகாரிகளின் ஆதரவு, உதவி கிட்டும். இதுவரை பலவித சவால்கள், போட்டி,பொறாமை சந்தித்துக் கொண்டு பொறுமையாக இருந்த காரணத்தால் அதற்கேற்ப பரிசுகளும் பெறுவீர்கள். இதுவரை உங்களை பாராட்டி புகழ்ந்து பேசி, முகத்திற்க்குப் பின்னால் சூழ்ச்சி செய்தவர்களின் முகத்திரை வெளிப்படும். எதிர்பார்த்துக் கொண்டு இருந்த பணிமாற்றம், இடமாற்றம் கிடைக்கும்.

உங்கள் வீட்டு விஷயங்களில் யாரையும் தலையிட வைக்க வேண்டாம், பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளவும் வேண்டாம். வீண் பேச்சு, வெட்டி பேச்சுக்களைத் தவிர்த்திடுங்கள். மாற்றங்கள் நிகழ்ந்தால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். கிரகங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தருவதற்காகத்தான் மாற்றங்கள் தருகிறது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

இல்லத்தில் இனிய சூழல் உருவாகும். தடைபட்டுக் கொண்டு இருந்த விஷயங்கள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும். உறவினர்கள் இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். விடுபட்ட குலதெய்வ பிரார்த்தனைகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கல்யாண பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடிவுபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில், ஏற்றுமதி இறக்குமதி, வணிகம் போன்றவை சீராக நடைபெறும். பிறரின் தூண்டுதல்அல்லது ஆலோசனைப்படி எதையும் முதலீடு செய்யாதீர்கள். தக்க ஆலோசனை மற்றும் அதைப் பற்றி முழுவதும் அறிந்த பிறகு முதலீடு செய்யுங்கள்.

மாணவ மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பெற்றோர்களைப் பெருமைப்படுத்துவார்கள். வெளிநாட்டிற்கு சென்று கல்வி பயல கடன் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை மனதார வழிபட்டால் வேண்டியதை அருள் புரிவாள்.

From around the web