மீனம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள மீனம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் வீண் விரயங்கள் ஏற்படுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. அஷ்டமத்தில் குரு பகவானால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் எட்டாம் வீட்டில் மறைவதால் மனக்குழப்பங்கள் உண்டாகும். பணப்புழக்கம் சரளமாக இருக்காது. சனி பகவான் பத்தாம் இடத்தில் இருப்பதால் எதையும் சமாளிக்கும் திறனை கொடுப்பார். குருவும் சனி பகவானும் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும்போது வரவு வந்த மறுநிமிடமே செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு
 
Meenam june month rasi palan 2018

அன்புள்ள மீனம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் வீண் விரயங்கள் ஏற்படுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. அஷ்டமத்தில் குரு பகவானால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் எட்டாம் வீட்டில் மறைவதால் மனக்குழப்பங்கள் உண்டாகும். பணப்புழக்கம் சரளமாக இருக்காது. சனி பகவான் பத்தாம்  இடத்தில் இருப்பதால் எதையும் சமாளிக்கும் திறனை கொடுப்பார்.

குருவும் சனி பகவானும் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும்போது வரவு வந்த மறுநிமிடமே செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து வரக்கூடும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதம் ஆனாலும் நல்ல விதமாக முடிவடையும். வேலை பளு அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு திடீர் மாறுதல்கள் ஏற்படும். திடீர் இடமாற்றம் உண்டாகும்.

பதினோராம் இடத்தில் கேது, ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் தொடர்வதால் பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படக்கூடும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

மாத தொடக்கத்தில் மிதுனத்தில் சுக்கிரன் இருக்கும்போது பணவரவு வரக்கூடும். சொத்து பிரச்சனை சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும்.  ஜூன் 9-ம் தேதிக்கு பிறகு கடகத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இல்லத்தில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். ஜூன் 5-ம் தேதி மிதுனத்தில் புதன் சஞ்சரிக்கும்போது பாராட்டும், புகழும் கிடைக்கும். மொத்தத்தில் இந்த ஜூன் மாதம் விரயங்களை சுப விரயங்களாக மாற்றி கொள்வது உங்கள் புத்திசாலிதனமாகும்.

From around the web