கன்னி ராசி விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018!

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு எதிலும் நிதானம் மற்றும் கவனமாக செயல்பட வேண்டிய வருடமாக இருக்கிறது. உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் இடத்தில் குரு பகவான், நான்காம் இடத்தில் சனி பகவான், ஐந்தாம் இடத்தில் கேது பகவான், பதினோராம் இடத்தில் ராகு பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்த விளம்பி வருடத்தில் கன்னி ராசியினர் எந்த செயலில் ஈடுபட்டாலும் ஒரு முறைக்கு இரு
 
Kanni vilambi Tamil puthandu rasi palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு எதிலும் நிதானம் மற்றும் கவனமாக செயல்பட வேண்டிய வருடமாக இருக்கிறது. உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் இடத்தில் குரு பகவான், நான்காம் இடத்தில் சனி பகவான், ஐந்தாம் இடத்தில் கேது பகவான், பதினோராம் இடத்தில் ராகு பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்த விளம்பி வருடத்தில் கன்னி ராசியினர் எந்த செயலில் ஈடுபட்டாலும் ஒரு முறைக்கு இரு முறை நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.

கன்னி ராசியினர் வீட்டில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் மேல் வீண் சந்தேகம், சண்டை என்று இருக்காதீர்கள். வீண் பேச்சு, வீண் ஆடம்பரம் தவிர்த்திடுங்கள். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேசுங்கள். உங்களின் வாழ்க்கை துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார். பெரியவர்களிடம் மற்றும் பெற்றோரிடம் எடுத்தெறிந்துப் பேசாதீர்கள்.

பெற்றோர்களின் ஆசியால் சுப தடைகள் விலகும். நான்காம் இடத்தில்  சனி பகவான் இருப்பதால் யாரிடமும் வன்மம் காட்ட வேண்டாம். குறிப்பாக  தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். தினமும் சிறிது நேரமாவது தியானம், குலதெய்வ வழிபாடு செய்து வந்தால் இந்த ஆண்டு முழுவதும் நன்மைகள் தரும் விதமாக இருக்கும். தாய்வழி உறவுகளிடம் வார்த்தைகளில் கசப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தாயாரின் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். பூர்வீக சொத்துகளில் வீண் பிடிவாதம் வேண்டாம்.

இரண்டாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் நல்ல பணவரவு தருவார். அதற்கேற்ப செலவுகள் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் அதனை  சுப செலவுகளாக மாற்றிக் கொள்ளுங்கள். உறவுகளிடம்  பிடிவாதம் காட்டாமல் இருக்க வேண்டும்.

கன்னி ராசி பெண்கள் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுவதையும், கோபத்தையும் தவிர்த்து விடுங்கள். ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஏதேனும் வாங்கும் முன் இந்த பொருள் பயனுள்ளதாக இருக்குமா அல்லது தேவையா என்பதை அறிந்து வாங்கி கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்கள் திறனை அறிய தாமதம் ஏற்பட்டாலும் தகுந்த நேரத்தில் அது வெளிப்படும். யாருக்கும் வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள். ஒரு சில நேரங்களில் அது உங்களால் செயல்படுத்த முடியாமல் போகும். புதியதாக அறிமுகமாகும் நபரை நம்பி எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம், பணிமாற்றம் தாமதமாக உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். வங்கி  கடன்களை முறையாக செலுத்தி விடுங்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் பணிச்சுமை அதிகரிக்கும். கடினமாக உழைத்துக் கொண்டே இருந்தால் தகுந்த முன்னேற்றம் மற்றும் லாபம் உண்டாகும். பதினோராம் இடத்தில் இருக்கும் ராகு பகவான் உங்களுக்கு பல விதத்தில் உபரி வருமானம் தருவார்.

கன்னி ராசி மாணவ மாணவிகள் சோம்பலை தவிர்த்து விடுங்கள். எதிலும் அலட்சியம் காட்டாமல் அன்றாட பாடத்தை படித்து விடுங்கள். படிப்பில் கவனம் சிதறும். வீண் பேச்சு, நண்பர்களிடம் அரட்டை, நவீன சாதனங்களை  நீண்ட நேரம் பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். பகுதி நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

பரிகாரம்:

கன்னி ராசியினர் வியாழக்கிழமை குரு வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும். செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு செய்து வந்தால் உங்கள் வாழ்க்கை  மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

From around the web