சந்திர கிரகணம் நேரம்!

விளம்பி வருடம், 2018 ஜூலை மாதத்தில் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரவு 11.54 மணிக்கு மகரம் ராசியில் உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. நள்ளிரவு 1 மணிக்கு முழுமையான சந்திர கிரகணம் தொடங்கி சந்திரன் முழுவதும் சிவப்பு நிறமாக இருக்கும். நள்ளிரவு 1.51 மணிக்கு சந்திர கிரகணம் உச்சைத்தை அடையும். அதிகாலை 2.43 மணி வரை முழுமையான சந்திர கிரகணம் இருக்கும். நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 2.43 மணி
 
Chandra grahanam timings 2018

விளம்பி வருடம், 2018 ஜூலை மாதத்தில் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரவு 11.54 மணிக்கு மகரம் ராசியில் உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. நள்ளிரவு 1 மணிக்கு முழுமையான சந்திர கிரகணம் தொடங்கி சந்திரன் முழுவதும் சிவப்பு நிறமாக இருக்கும். நள்ளிரவு 1.51 மணிக்கு சந்திர கிரகணம் உச்சைத்தை அடையும். அதிகாலை 2.43 மணி வரை முழுமையான சந்திர கிரகணம் இருக்கும். நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 2.43 மணி வரை சந்திரன் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஜூலை 28 ஆம் தேதி, அதிகாலை 3.49 மணிக்கு பிரதமி திதி திருவோணம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் முடிவடைகின்றது.

இந்த சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணத்தில் ஒரு சில நட்சத்திரங்கள் பாதிப்பு ஏற்படுவதால் சாந்தி பரிகாரம் செய்து கொள்ளலாம். கிருத்திகை, உத்திராடம், பூராடம், ரோகினி, அஸ்தம், அவிட்டம், உத்திரம் போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்ளலாம். வெள்ளிக்கிழமை அன்று பிறந்தவர்களுக்கு சாந்தி பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

சாந்தி பரிகாரம் என்பது கிரகண காலம் முடிந்த பிறகு அதாவது சனிக்கிழமை அதிகாலையில் நீராடி, அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று சந்திரனை வணங்கி வந்தால் பதிப்புகளில் இருந்து விடுபடலாம். கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் சந்திரனுக்கு உரிய பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லி, நெய் தீபம் ஏற்றி, பால் நெய்வேத்தியம் செய்யலாம்.

சந்திர கிரகண காலத்தில் செய்யக்கூடியவை, தவிர்க்க வேண்டியவை பார்க்கலாம். கிரகண காலத்தில் கோயில்கள் சாத்தப்படும். கிரகண நேரத்தில் கோவில்களில் பூஜை நடைபெறாது என்பதால் வீட்டில் அதனை செய்வதை தவிர்த்து விடுங்கள். கிரகண காலத்திற்கு முன்பு அவித்த, சமைத்த பொருட்களை எடுத்துக் கொள்ள கூடாது. கிரகண காலம் முடிந்த பிறகும் ஏற்கனவே சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது.

சந்திர கிரகண காலத்தில் சாந்தி மந்திரத்தை சொல்லலாம். கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் கிரகண காலத்தில் வெளியே போக வேண்டாம். அன்றைய தினம் தூர பிரயாணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். பிரயாணம் செய்ய நேரிட்டால் முன்கூட்டியே செல்லும் இடத்திற்கு சென்று விடுங்கள். அவித்த, சமைத்த உணவுகளை தவிர்த்து விட்டு, பால், தண்ணீர், பழங்கள் எடுத்து கொள்ளலாம். கிரகணம் நேரம் முடிந்த பிறகு வீட்டை மஞ்சள் தண்ணீர் தெளித்து கொண்டு சுத்தம் செய்யலாம். பிறகு நீராடி, பூஜை செய்து, புதியதாக சமைத்த உணவினை உண்ணலாம்.

From around the web